Monday, December 2, 2019

02.12.2019 NATCON


நமது ராணிப்பேட்டை பவர் சிட்டியின் முன்னாள் தலைவர் ஜேசி திருக்குமரன் அவர்களும், உடனடி முன்னாள் தலைவர் ஜேசி ஏழுமலை அவர்களும் NATCON சென்றுள்ளதை முன்னிட்டு அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

Saturday, November 30, 2019

30.11.2019 விதைப்பந்துகள் வழங்கப்பட்டன


ராணிப்பேட்டை கங்காதரா மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நமது பவர் சிட்டியின் சார்பாக விதைப்பந்துகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாணவ மாணவியருக்கு பயிற்சி வகுப்புகளும் அளிக்கப்பட்டன.
நமது முன்னாள் தலைவர் ஜேசிரமேஷ் பாபு அவர்கள் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி வகுப்புகளை சிறப்பித்தனர்
விதைப்பந்து மகிமை, அவற்றின் அவசியம் அவற்றைப் பயன்படுத்தும் விதம், அதனால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள், இயற்கை வளங்களை பாதுகாக்கும் முறைகள் இவை அனைத்தும் மாணவர்களுக்கு குறிப்பாக கொடுக்கப்பட்டது...

Tuesday, November 26, 2019

26.11.2019 காயகல்ப யோகா பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது


இன்று ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ மாணவிகளுக்கு யோகக் கல்வியில் சிறப்புப் பயிற்சியான காயகல்ப யோகா பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி  பெற்றனர்.

காயகல்ப யோகப் பயிற்சியை துணைப்பேராசிரியர் (பயிற்சி) மனவளக்கலை யோகா பயிற்றுநர் மற்றும் நமது ஜேசி இன் மண்டல பயிற்சியாளரும் ஆன ஜேசி திருக்குமரன் அவர்கள் பயிற்சி வகுப்பினை சிறப்பாக நடத்திக் கொடுத்தார்.

பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வினை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரும், நமது செயலாளர் 2020 ஜேசி தண்டபாணி அவர்களும் துவங்கி வைத்தனர்.

இப்பயிற்சி வகுப்புக்கான திட்ட இயக்குனராக புதிய உறுப்பினர் ஜே சி உதயகுமார் அவர்கள் பொறுப்பேற்று திட்ட நிகழ்வினை திறம்பட செய்து முடித்தார்.

இக் காயகல்ப்ப யோகப் பயிற்சியினை சிறப்பாக நடத்திக் கொடுத்த ஜேசி திருக்குமரன் அவர்களுக்கு நமது கிளை இயக்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Saturday, November 23, 2019

23.11.2019 விதைப்பந்துகள் வழங்கப்பட்டன.



நமது பெல் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியின் முதல்வருக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவியருக்கும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் உள்ள விதைப்பந்துகள் வழங்கப்பட்டன.

மேலும் மரங்களின் பயன்கள் அவற்றைப் பாதுகாக்கும் முறைகள் விதைப்பந்துகள் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்கு குறிப்புகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வை வழிநடத்திச் சென்ற முன்னாள் தலைவர் ஜேசிபாஸ்கரன் அவர்களுக்கும் தலைவர் மற்றும் செயலாளர் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

23.11.2019 சாசன தலைவர் MJF விருது வாங்கியுள்ளார்


நமது ராணிப்பேட்டை பவர் சிட்டியின் சாசன தலைவர் PMK அவர்கள் இன்று அரிமா சங்கத்தில் (lions club)  MJF  விருது வாங்கியுள்ளார்.
அவர்களுக்கு நமது கிளை இயக்கத்தின் சார்பாக கோடான கோடி நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.